லாருட், செப்டம்பர்.05-
பேரா, செலாமாவில் அமைந்துள்ள பசார் பாகி சுங்கை பாயோர் மலேசியாவின் மிக நீளமான காலைச் சந்தையாக, மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. சுமார் 2.32 கிலோமீட்டர் நீளம் கொண்ட இச்சந்தையை மலேசியா புக் ஒஃப் ரெகோர்ட்ஸ் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.
இதற்கு முன்பு 2.1 கிலோமீட்டர் நீளம் கொண்ட பஹாங், தெமெர்லோ காலைச் சந்தையின் சாதனையை பசார் பாகி சுங்கை பாயோர் முறியடித்துள்ளதாக செலாமா துணை மாவட்ட அங்காடி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் முகமட் எஸாயுஹான் அவாங் தெரிவித்துள்ளார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த சுங்கை பயோர் சந்தை ஆரம்பத்தில் பெக்கான் ஜுமாஆட் சுங்கை பாயோர் என அறியப்பட்டு, 1960-களிலிருந்து ஆற்றங்கரையில் இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.








