வெளிநாட்டிற்கு தப்பி ஓடியிருக்கலாம் என்று நம்பப்படும் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினின் மருமகனை பிடிப்பதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம், அனைத்துலக போலீஸ் பிரிவான இன்டர்போல் உதவியை நாடவிருக்கிறது. முகைதீனின் மருமருகன் முகமது அட்லான் பெர்ஹான் பெயரை அனைத்துல சிவப்புப் பட்டியலில் சேர்ப்பதற்கு ஏதுவாக இன்டர்போல் உதவியை நாடுவதற்கான முன்னெடுப்புகளை எஸ்.பி.ஆர்.எம் மேற்கொள்ளலாம் என்று அதன் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி தெரிவித்துள்ளார்.
முகைதீனின் மருமருகன் ஒரு குறிப்பிட்ட நாட்டில் பதுங்கியிருப்பது தெரியவந்துள்ளது. எனினும் அந்த நாட்டின் பெயரை தற்போதைக்கு வெளியிட இயலாது என்று இன்று காலையில் கோலாலம்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அஸாம் பாக்கி மேற்கண்டவாறு கூறினார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு நாட்டின் எட்டாவது பிரதமராக முகைதீன் யாசின் பொறுப்பேற்று இருந்த போது, அவரின் நம்பிக்கைக்கு பாத்திரமான பெரிக்காத்தான் நேஷனல் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்ஸா ஸைனுதீன் தலைமையேற்று இருந்த உள்துறை அமைச்சில் அந்நியத் தொழிலாளர்களுக்கான பதிவு, ஆள் எடுப்பு மற்றும் பயோமெட்ரிக்ஸ் தரவுகள் தொடர்புடைய குத்தகையை பெற்றுத் தருவதில் முகைதீன் யாசினின் மருமகன் முகமது அட்லான் பெர்ஹான் சுமார் ஒரு கோடி வெள்ளியை லஞ்சமாக பெற்றதாக கூறப்படும் வேளையில் அவரின் இந்த கையூட்டு நடவடிக்கைக்கு துணையாக இருந்ததாக நம்பப்படும் அவரின் 69 வயது வழக்கறிஞர் மன்சூர் சாத் ஆகியோர் தற்போது தீவிரமாக தேடப்பட்டு வருகின்றனர்.
தனக்கு எதிராக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டில் முகைதீனின் மருமகன் ஊழல் புரியவில்லை என்றால் எதற்காக எஸ்.பி.ஆர்.எம் விசாரணைக்கு பயந்து தலைமறைவாக வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று கேள்வி எழுப்பியிருந்தார்.
முகமது அட்லான் பெர்ஹான், முன்னாள் பிரதமர் முகைதீனின் 4 பிள்ளைகளில் இரண்டாவது பிள்ளையான மகள் நபிலா மஹிதீன் னை திருமணம் செய்து கொண்டவர் ஆவார்.

Related News

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்


