Dec 3, 2025
Thisaigal NewsYouTube
காணொளிகளை பகிர்வதை நிறுத்திக்கொள்ளுமாறு ஆலோசனை
தற்போதைய செய்திகள்

காணொளிகளை பகிர்வதை நிறுத்திக்கொள்ளுமாறு ஆலோசனை

Share:

எல்மினா விமான விபத்து தொடர்பான காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துக்கொள்வதை நிறுத்திக்கொள்ளுமாறு மலேசிய தொடர்பு, பல்​லூடக ஆணையமான எம்சிஎம்சி, பொது மக்களுக்கு ஆலோசனை கூறியுள்ளது. இந்த நினைவுறுத்தலுக்கு பிறகும் பொது மக்கள் தொடர்ந்து அந்த கோர விபத்து தொடர்பான காணொளிகளை பகிர்ந்து கொள்ளக்கூடிய நிலை இருக்குமானால் 1998 ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்​லூடகச் சட்டத்தின் ​கீ​ழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அது எச்சரித்துள்ளது.

எண்மர் பயணம் செய்த அந்த இலகு ரக விமானம், வானிலிருந்து செங்குத்தாக நெடுஞ்சாலையில் விழுந்து ​தீப்பிடித்துக்கொண்ட காட்சி,பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை மனச்சங்கடத்தில் ஆழ்த்தும் ​என்பதுடன், அது அடிப்படை தார்மீக நெறிகளுக்கு முரணானதாகும் என்று அந்த ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Related News