கோத்தா பாரு, செப்டம்பர்.22-
பாலியல் பலாத்கார வழக்குகளில், பதின்ம வயதிற்குட்பட்ட பெண்கள், தங்களது ஆண் நண்பர்கள் மீது குற்றச்சாட்டும் போது, அவர்கள் அதற்கு முன்பு சம்மத்துடன் உடலுறவு கொண்டிருந்தால், அப்பெண்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கிளந்தான் காவல்துறைத் தலைவர் யுசோஃப் மாமாட் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் பதிவாகும் மைனர் பாலியல் பலாத்கார வழக்குகளில், கிட்டத்தட்ட 90% இரு தரப்பினரின் சம்மதத்தையும் உள்ளடக்கியது தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், இக்குற்றங்களில், தற்போதுள்ள சட்டங்கள், பெரும்பாலும் ஆண்களுக்கு எதிராக மட்டுமே உள்ளன என்றும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.
பாலியல் குற்றங்களில் ஈடுபடும் பதின்ம வயதினருக்கு எச்சரிக்கை விடுப்பதற்காகத் தான் இப்பரிந்துரையைக் கூறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.








