Oct 16, 2026
Thisaigal NewsYouTube

சவூதி அரேபிய பிரஜையை மிரட்டுவதா, விசாரணை தொடங்கியது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சவூதி அரேபிய பிரஜையை மிரட்டுவதா, விசாரணை தொடங்கியது

ரெம்பாவ், நவ. 19-


சவூதி அரேபிய பிரஜையான ஓர் ஆடவரிடம் பணம் கேட்டு, அச்சுறுத்தியதாக கூறப்படும் போலீஸ்காரர்களுக்கு எதிரான விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக ரெம்பாவ் மாவட்ட போலீஸ் தலைவர் ஷாயிக் அப்துல் கடார் ஷாயிக் முகமட்தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் அந்த சவூதி அரேபிய ஆடவரிடமிருந்து போலீசார் கடந்த திங்கட்கிழமை புகார் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த நபர், வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் ரெம்பாவ் மாவட்டத்தில் வாகனத்தை செலுத்திக்கொண்டு இருந்த போது சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்களால் மடக்கப்பட்டுள்ளதாக தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

தம்மை மிரட்டிய போலீஸ்காரர்கள், பணம் கேட்டு அச்சுறுத்தியதாக தமது புகாரில் குறிப்பிட்டுள்ளதாக ஷாயிக் அப்துல் கடார் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் குற்றவியல் சட்டம் 384 ஆவது பிரிவின் கீழ் தற்போது புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →