Oct 17, 2026
Thisaigal NewsYouTube

பிறை சட்டமன்ற உறுப்பினரின் தீபாவளி பொது உபசரிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பிறை சட்டமன்ற உறுப்பினரின் தீபாவளி பொது உபசரிப்பு

பிறை சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமுவின் தீபாவளி பொது உபசரிப்பு, கடந்த சனிக்கிழமை, பிறை, Taman Chai Leng Park பலநோக்கு மண்படத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்விற்கு, பினாங்கு ஆளுநர் Tun Dato Seri Utama Ahmad Fuzi Haji Abdul Razak, பினாங்கு முதலமைச்சர் Chow Kon Yeow, பினாங்கு முன்னாள் முதலமைச்சர் Lim Guan Eng, மனித வள அமைச்சர் Steven Sim உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.

பிறை சட்டமன்றத் தொகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்தற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தொடர்ந்து ஆக்கக்பூர்வமான முயற்சிகளை தாம் மேற்கொண்டு வரும் வேளையில் தொகுதி மக்களும் தமக்கு வழங்கி வரும் ஆதரவுக்கும், ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக மாநில ஆட்சிகுழு உறுப்பினருமான டத்தோஸ்ரீ சுந்தராஜு தமது உரையில் தெரிவித்தார்.

தம்முடைய தொகுதியில் நடத்தப்படும் இந்த தீபாவளி பொது உபசரிப்புக்கு தமது அழைப்பை ஏற்று வருகைப்புரிந்துள்ள பினாங்கு ஆளுநருக்கும் டத்தோஸ்ரீ சுந்தராஜு தமது நன்றியை தெரிவித்துக்கொாண்டார்.

முன்னதாக பினாங்கு ஆளுநர், பினாங்கு முதலமைச்சர், முன்னாள் முதலமைச்சர் ஆகியோருக்கு டத்தோஸ்ரீ சுந்தராஜு மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →