புத்ராஜெயா, ஜூலை.16-
ஸ்கேம் மோசடிச் சம்பவங்களைக் கையாளுவதற்கு அமைக்கப்பட்டுள்ள தேசிய மோசடி மீட்பு மைய நடவடிக்கைகளைப் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வர்த்தகக் குற்றத் தடுப்புப் புலனாய்வு வழி நடத்தும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
என்எஸ்ஆர்சி என்று சுருங்க அழைக்கப்படும் அந்த மையத்தில் பேங்க் நெகாரா, மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையம் மற்றும் தேசிய நிதி குற்றஞ்செயல் தடுப்புப் பிரிவு ஆகியவை இடம் பெற்றிருந்த போதிலும் அந்த மையத்தை வழி நடத்துவதற்கென்று தனி அரசாங்க ஏஜென்சி எதுவும் இல்லை.
இந்நிலையில் அந்த மையத்தை இனி புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வர்த்தகக் குற்றத் தடுப்புப் புலனாய்வு வழி நடத்தும் என்று சைஃபுடின் குறிப்பிட்டார்.








