May 24, 2026
Thisaigal NewsYouTube
எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை
தற்போதைய செய்திகள்

எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை

Share:

அலோர் கஜா , ஆகஸ்ட் 19

2023-ஆம் ஆண்டில், 33 வயதுஇஸ்டிகோமா அஹ்மத் ரோஸ் என்ற ஆசிரியையின் தலையை வெட்டிக் கொலை செய்தது தொடர்பாக, இன்று மலாக்கா, அலோர் கஜா மேஜிஸ்ட்ரெட் நீதிமன்றத்தில், FOREX வர்த்தகர் ஒருவர் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின், 36 வயதுமோஹட் பாட்ஸ்ல்ய் ஆரிஃடிஜிலாஹ்த மக்கு புரிந்ததாக தலையசைத்தார்.

எனினும், அந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டிருப்பதால், குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து எந்தவொரு வாக்குமூலம் பதிவுச் செய்யப்படவில்லை.

அந்த வழக்கின் மறுசெவிமடுப்பு அக்டோபர் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட அதேவேளை, அந்த ஆடவர் பிணையில் வெளியேற நீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை.

Related News