Dec 4, 2025
Thisaigal NewsYouTube
துருன் அன்வார் பேரணியில் மழையையும் பொருட்படுத்தாமல் சுமார் 15 ஆயிரம் பேர் திரண்டனர்
தற்போதைய செய்திகள்

துருன் அன்வார் பேரணியில் மழையையும் பொருட்படுத்தாமல் சுமார் 15 ஆயிரம் பேர் திரண்டனர்

Share:

கோலாலம்பூர், ஜூலை.26-

கோலாலம்பூர் மாநகரில் டத்தாரான் மெர்டெக்கா முன்புறம் ஏற்பாடு செய்யப்பட்ட துருன் அன்வார் பேரணியில் சுமார் 15 பேர் திரண்டுள்ளனர் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் இந்தப் பேரணியை ஏற்பாடு செய்த பெரிக்காத்தான் நேஷனலின் ஓர் அங்கமாக இருக்கும் பாஸ் கட்சியோ, 3 லட்சம் பேர் திரண்டு இருப்பதாக தனது அதிகாரத்துவ அகப்பக்கத்தில் அறிவித்துள்ளது.

பிற்பகல் 3 மணியளவில் மழை பெய்யத் தொடங்கிய போதிலும் திரண்டு இருந்த மக்கள், மழையைப் பொருட்படுத்தாமல் துருன் அன்வார் என்று கோஷமிட்டவாறு இருந்தனர்.

டத்தாரான் மெர்டேக்கா முன், தலைவர்கள் பேசுவதற்கு அமைக்கப்பட்டு இருந்த ரெடிமெட் மேடையை அமலாக்க அதிகாரிகள் அகற்றினர். எனினும் தலைவர்கள் லோாரியின் நின்றவாறு பேசுவதற்கு போலீசார் அனுமதி அளித்தனர்.

சுல்தான் அப்துல் சாமாட் பழைய நீதிமன்றக் கட்டடத்தின் முன்புற குழுமிய மக்கள், டத்தாரான் மெர்டோக்கா திடலில் நுழைய முயற்சி செய்த போதிலும் போலீசார் முழு பலத்தைக் கொண்டு கூட்டத்தைக் கட்டுப்படுத்தினர். பிற்பகல் 3.40 மணி வரை பேரணியில் பஙகேற்றவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரம் பேர் என்று ஊடகங்கள் பதிவு செய்துள்ளன.

நிலைமையைக் கண்காணிக்க கோலாம்பூர் இடைக்கால போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யூசோஃப் ஜான் நேரடியாகக் களம் இறங்கினார். அவரிடம் பெர்சத்து கட்சியைப் சேர்ந்த பட்ரூல் ஹிஷாம் ஷாராரின் மற்றும் ஹில்ஹாம் இடாம் பேச்சு வார்த்தை நடத்தியப் பின்னர் டத்தாரான் மெர்டேக்கா முன்புறம் லோரியை மேடையாகப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது.

அந்த வாகனம் சம்பந்தப்பட்ட இடத்திற்குச் செல்வதற்கு வழிவிடும் வகையில் பங்கேற்பாளர்கள் மனிதச் சங்கிலியை அமைந்தது வழியை ஏற்படுத்தினர்.

முன்னதாக, அனைவரும் நான்கு பிரிவுகளாக பிரிந்து சோகோ, பசார் செனி உட்பட நான்கு இடங்களிலிருந்து அன்வாரைப் பதவி இறங்கச் சொல்லும் முழக்கத்துடனும், பதாகைகளை ஏந்திய வண்ணமும் ஊர்வலமாக டத்தாரான் மெர்டேக்காவை நோக்கி வந்தனர்.

இந்தப் பேரணியில் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது பிரதான உரை நிகழ்த்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 4.20 வரையில் எந்தவோர் அசம்பாவிதமும் நிகழ்ந்தாகப் புகார் இல்லை.

பேரணியில் பங்கேற்றவர்கள் பெரும்பகுதியின் பாஸ் கட்சியினர் மற்றும் மாணவர்கள் என்று நம்பப்படுகிறது.

Related News