Mar 27, 2026
Thisaigal NewsYouTube
டிரெய்லர் லோரியில் மோதி மாது மரணம்
தற்போதைய செய்திகள்

டிரெய்லர் லோரியில் மோதி மாது மரணம்

Share:

லாருட் , செப்டம்பர் 02-

மாது செலுத்திய கார், செம்பனைப்பழ லோரியில் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மாண்டார்.

இத்துயரச் சம்பவம் நேற்று காலை 8.41 மணியளவில் பேரா, லாரூட், கம்போங் போண்டோக் தஞ்சங் அருகில் ஜாலான் தைப்பிங்- கில் நிகழ்ந்தது.

ரோசானா ஓத்மான் என்ற 32 வயது மாது, தலையிலும், உடலிலும் கடும் காயங்களுக்கு ஆளாகி மரணமுற்றதாக பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமது தெரிவித்தார்.

காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய அந்த மாதுவின் உடலை மீட்பதற்கு பிரத்தியேக சாதனங்கள் பயன்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News