லைசென்ஸின்றி 14 வயது பெண் ஒருவர் செலுத்திய புரோத்தோன் சத்ரியா கார், வேகக்கட்டுப்பாட்டை இழந்து, மோட்டார் சைக்கிளை மோதியதில் அதில் பயணித்த பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், அவரின் சகோதரி படுகாயத்திற்கு ஆளானார்.
இச்சம்பவம் நேற்று இரவு 7.05 மணியளவில் அலோர் ஸ்டார், ஜாலான் கோலா கெடா வில் நிகழ்ந்தது. 32 வயது நூர் சியாபிகா அப்துல்லா என்ற அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே மாண்ட வேளையில் அவரின் 43 வயது சகோதரி நோர் அலிசா என்பவர் கடுமையான காயங்களக்கு ஆளானார். மோட்டார் சைக்கிளில் பயணித்த அந்த இரு சகோதரிகளும் தாமான் பெர்சத்துவிலிருந்து கோல கெடாவை நோக்கி சென்ற கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக கோத்தா ஸ்டார் மாவட்ட போலீஸ் தலைவர் சையத் பஸ்ரி சையத் அலி தெரிவித்தார்.








