Aug 6, 2026
Thisaigal NewsYouTube
அவசர நிலைகளில் பள்ளிகளின் பராமரிப்புச் செலவுக்கு கல்வி
தற்போதைய செய்திகள்

அவசர நிலைகளில் பள்ளிகளின் பராமரிப்புச் செலவுக்கு கல்வி

Share:

இவ்வாண்டு வெள்ளம், புயல் அல்லது தீ போன்ற அவசர நிலைகளில் பள்ளிகளின் பராமரிப்புச் செலவுக்குக் கல்வி அமைச்சு 8 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

கட்டமைப்புகள் மற்றும் கட்டுமானமற்ற கட்டிடங்கள், கூரை, மின் வயரிங், வேலி அமைத்தல், வடிகால் மற்றும் பிற சிறிய பராமரிப்பு உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் இந்த நிதியின் வாயிலாக செயல்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் ஃபட்ஹ்லினா சிடேக் தெரிவித்துள்ளார்.

மேலும், கல்வி அமைச்சு கீழ் உள்ள பள்ளிகளில் ஊனமுற்றோருக்கான வசதிகளை வழங்குவதில் அமைச்சு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News