பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்.03-
மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவுகளைக் கட்டுப்படுத்தும் புதிய முயற்சியாக, சந்தையில் விலை ஏற்றங்களைத் துல்லியமாகக் கண்டறிய, 'விலை - விநியோகக் கண்காணிப்பு அமைப்பு' ஒன்றை அரசாங்கம் உருவாக்கவுள்ளது. இந்த அமைப்பின் மூலம் உற்பத்தியாளர்கள் முதல் சில்லறை விற்பனையாளர்கள் வரை அனைத்து மட்டங்களிலும் விலையையும் பொருட்களின் விநியோகத்தையும் கண்காணிக்க முடியும் என உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சர் அர்மிஸான் முகமட் அலி தெரிவித்தார்.
இதன் மூலம் இடைத்தரகர்களின் விலை மோசடிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும் என்றும், சபா, சரவாக் போன்ற மாநிலங்களில் உள்ள விலை வேறுபாடுகளைக் களையவும் சிறப்பு செயற்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.








