Oct 16, 2026
Thisaigal NewsYouTube

வெள்ளம் ஏற்படலாம் என நீர்ப்பாசனம், வடிகால் துறை கணித்துள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வெள்ளம் ஏற்படலாம் என நீர்ப்பாசனம், வடிகால் துறை கணித்துள்ளது

நெகிரி செம்பிலான், நவ. 17-

நெகிரி செம்பிலான், தம்பின் பகுதியில் உள்ள நான்கு ஆறுகளின் நீர்மட்டம் அபாய அளவை விட அதிகமாக இருக்கும், இதனால் இன்று பிற்பகல் வெள்ளம் ஏற்படலாம் என நீர்ப்பாசனம், வடிகால் துறை கணித்துள்ளது.

இன்று பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ள நிலையில், GEMAS ஆறு, MUAR ஆறு, Gemenceh ஆறு, Pador ஆறு ஆகியவற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக JPSஇன் தேசிய வெள்ள முன்னறிவிப்பு, எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட நான்கு ஆறுகளின் ஐந்து கிலோமீட்டர் (கி. மீ) சுற்றளவில் உள்ள பல தாழ்வான பகுதிகள் வெள்ள அபாயத்தில் உள்ளன என்று அத்துறை குறிப்பிட்டுள்ளது.

"தம்பின் மாவட்டத்திற்குள் உள்ள Kampung Tiong , Kampung Londah , Jalan Gemas – Rompin, Felda Jelai ஆகியவை வெள்ளத்தால் பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்ட இடங்கலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு வசித்து வரும் மக்கள் விழிப்புடன் இருக்கவும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு இணங்கவும் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →