Dec 4, 2025
Thisaigal NewsYouTube
போலி ஆவணங்கள் சமர்ப்பித்ததாக முன்னாள் உரிமையாளர் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

போலி ஆவணங்கள் சமர்ப்பித்ததாக முன்னாள் உரிமையாளர் குற்றச்சாட்டு

Share:

பென்ஞானா கெர்ஜெயா திட்டத்தில் ரொக்க உதவிகளை பெறுவதற்கு போலி ஆவணங்களை சமர்ப்பித்து மோசடி புரிந்ததாக நிறுவனம் ஒன்றின் முன்னாள் உரிமையாளர் ஒருவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

எஸ். கமல சேகரன் என்ற 47 வயதுடைய அந்த ஆடவர், நீதிபதி சுசானா ஹுசின்முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவருக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டது. Syarikat Tech Train Consultancy என்ற நிறுவனத்தின் உரிமையாளர் என்று கூறப்படும் கமலசேகரன் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து, பென்ஞானா கெர்ஜெயா திட்டத்தில் 9,500 வெள்ளியை பெற்று மோசடி புரிந்ததாக நீதிமன்றதில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய சட்டத்தின் கீழ் கமலசேரகன் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

Related News