நாளை புதன் கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் நிலையில், அக்கூட்டத்திற்கு முன்னதாக அமைச்சரவை சீரமைப்பு நடைபெறும் என்று கூறப்படுவதைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார்.
மாமன்னர் சுல்தான் அப்துல்லாவை சந்திப்பதற்கு நாளை புதன் கிழமை இஸ்தானா நெகாராவிற்கு செல்வதற்குத் தாம் திட்டமிட்டிருந்தாலும் அச்சந்திப்பில் வழக்கமாக அமைச்சரவை தொடர்புடைய விவகாரங்கள் மட்டுமே விவாதிப்பதற்கு தாம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் இன்று விளக்கமளித்தார்.








