வீடமைப்புப்பகுதி அருகில் சாலையில் திடீரென்று குறுக்கே ஓடிய நான்கு வயது சிறுவன் ஒருவன், வாகனத்தில் மோதப்பட்டு உயிரிழந்தான். இச்சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் பெட்டாலிங் ஜெயா, சுங்ஙை வே, ஜாலான் எஸ்எஸ் 9A/8 இல் நிகழ்ந்தது. நிஸ்ஸான் X - த்ரெல் ரக காரினால் மோதப்பட்ட அந்நிய நாட்டைச் சேர்ந்த அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே மாண்டதாக பெட்டாலிாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முஹமாட் ஃபக்ருடின் அப்துல் ஹமிட் தெரிவித்தார். சிறுவனை மோதுவதிலிருந்து தவிர்க்க சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநர், பிரேக்னை முழு வீச்சில் அழுத்தியும், கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம், சிறுவனை மோதித்தள்ளியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று மொஹமாட் ஃபக்ருடின் குறிப்பிட்டார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


