ஈப்போ, ஆகஸ்ட்.23-
ஈப்போ, மேரு ராயா, தாமான் டேசா மேரு, ஜாலான் பெர்டானாவில் இன்று மதியம் 12.21 மணியளவில் நிகழ்ந்த விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர், வாகனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டு ஆற்றில் விழுந்து உயிரிழந்தார். இதர மூவர் காயமுற்றனர்.
இரண்டு கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் 33 வயது மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே மாண்டார்.
இதில் பெரோடுவா மைவி மற்றும் பெரோடுவா கெலிசா ஆகிய இரு கார்களின் ஓட்டுநர்களும் சொற்பக் காயங்களுக்கு ஆளாகியதாக பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்படையின் இடைக்கால உதவி இயக்குநர் ஷாஸ்லீன் முகமட் ஹனாஃபியா தெரிவித்தார்.








