கோலாலம்பூர், ஜூலை.23-
சாரா எனப்படும் சும்பாங்கான் அசாஸ் ரஹ்மா நிதி உதவித் திட்டத்தின் கீழ் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஒரு முறை வழங்கப்படக்கூடிய 100 ரிங்கிட் ரொக்க நிதி உதவி வழங்கப்படவிருக்கிறது. இந்த நிதி உதவி மக்களின் மைகாட் அட்டையில் சேர்க்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
வரும் ஆகஸ்ட் 31 ஆம் ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தேசியத் தினத்தையொட்டி, மலேசியர்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்க இந்த 100 ரிங்கிட் வழங்கப்படும். இது மக்களின் சிரமத்தைக் குறைக்க வல்லதாகும்.
இதன் வாயிலாக 2 பில்லியன் நிதி ஒதுக்கீட்டில், நாடு முழுவதும் 22 மில்லியன் மக்கள் பலன் பெறுவர் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், இன்று புதன்கிழமை மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் செய்தியில் அறிவித்துள்ளார்.








