கோலாலம்பூர், நவம்பர்.02-
மாமன்னர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் நாளை திங்கட்கிழமை தொடக்கம், சவூதி அரேபியா மற்றும் பாஹ்ரேன் ஆகிய நாடுகளுக்கு வருகை மேற்கொள்ளவிருக்கிறார்.
மலேசியாவிற்கும் மேற்கண்ட நாடுகளுக்கும் கடந்த 68 ஆண்டு காலமாக கட்டிக் காக்கப்பட்டு வரும் தூதரக உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் மாமன்னரின் இந்த அதிகாரத்துவப் பயணம் அமைந்துள்ளது.
சவுதி அரேபியாவிற்கு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வருகை புரிவது மூலம் வரலாற்று சாதனையை ஏற்படுத்தவிருக்கிறார். 1984 ஆம் ஆண்டில் அன்றைய மாமன்னர் Al-Marhum Sultan Haji Ahmad Shah- விற்கு பிறகு சவுதி அரேபியாவிற்கு மலேசிய மாமன்னர் வருகை புரிவது இதுவே முதல் முறையாகும் என்று இஸ்தானா நெகாரா இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மாமன்னர் ரியாத்தில் இருக்கும் போது, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான Mohammed Bin Dalman Abdulaziz Al Saudi-யுடன் Yamamah- அரண்மனையில் சந்திப்பு நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டது.








