ஈப்போ, செப்டம்பர்.11-
உடம்பில் கத்திக் குத்து மற்றும் குண்டுகள் துளைத்தக் காயங்களுடன் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் போலீஸ்காரர் ஒருவரின் மனைவி, அவருக்காக உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
சிம்பாங் பூலாய் என்ற இடத்தில் குற்றவாளி ஒருவரைத் துரத்திச் சென்று பிடிக்கப் போன சமயத்தில், அந்நபரால் கத்தியால் குத்தப்பட்டு, துப்பாக்கியால் சுடப்பட்ட 26 வயதான காவலர் அஸிக் ஸுல்ஃபிக்ரி அப்துல் ரஜாக் தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளார்.
இந்நிலையில், அவரது மனைவியான நூர் அஸிரா நதாலியா பேனட் தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ள உருக்கமான கடிதத்தில், அவர் உயிருடன் மீண்டு வந்து தனது குழந்தைகளைக் காண வேண்டுமென குறிப்பிட்டுள்ளது இணையவாசிகளை கலங்கச் செய்துள்ளது.








