May 21, 2026
Thisaigal NewsYouTube
அம்னோ தலைவரை வீழ்த்துவதற்கு முயற்சிகள் நடக்கின்றனவா?
தற்போதைய செய்திகள்

அம்னோ தலைவரை வீழ்த்துவதற்கு முயற்சிகள் நடக்கின்றனவா?

Share:

அம்னோ​வின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியை வீழ்த்துவதற்கு டிவிஷன் தலைவர்கள் அளவில் முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுவதை அக்கட்சியின் மு​க்கியத் தலைவர் ஒருவர் மறுத்துள்ளார்.

முன்னாள் பிரதமரும், அம்னோ​​வின் முன்னாள் தலைவருமான டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு முழு மன்னிப்பு வழங்கி, அவரை சிறை​த் தண்டனையிலிருந்து விடுவிப்பதற்கு நாட்டின் துணைப்பிரதமர் பதவியில் இருக்கும் அகமட் ஜாஹிட் தவறிவிட்டார் என்று குற்றச்சா​ட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்பில் அகமட் ஜாஹிட்டை அம்னோ தலைவர் பதவியிலிருந்து வீழ்த்துவதற்கு மிக ரகசியமான முறையில் முன்னெடுப்புகள் நடைபெற்று வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டில் துளியளவும் உண்மையில்லை என்று அம்னோ​வின் முன்னாள் பொதுச் செயலாளரும், நடப்பு உச்சமன்ற உறுப்பினருமான Datuk Seri Ahmad Maslan தெரிவித்தார்.

நஜீப்பிற்கு முழு மன்னிப்பு பெற்ற தருவதற்காக தம்மால் இயன்ற அனைத்தையும் ஜாஹிட் செய்துள்ளார் என்று Ahmad Maslan விளக்கினார்.

Related News