ஜோகூர் பாரு, ஜூலை.30-
தனது 6 வயது மகன் திஷாந்த் மரணத்தால் மனமுடைந்ததாக நம்பப்படும் அந்தச் சிறுவனின் தாயார் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
தனது ஒரே மகனைப் பறி கொடுத்த சோகத்தில் மூழ்கிய நிலையில் விரக்தியின் விளிம்பிற்குச் சென்று விட்டதாகக் கூறப்படும் அந்தச் சிறுவனின் தாயார், மனோ ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த மாதுவிற்கு உளவியல் ரீதியாகத் தேவையான ஆலோசனைகள் , நல்லுரைகள் முதலியவற்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜொகூர் மாநில பெண்கள், குடும்பம், சமூக மேம்பாட்டு துறை ஆட்சிக் குழு உறுப்பினர் கைரின் நிசா இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
அந்தச் சிறுவனின் தாயார் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.








