Oct 18, 2026
Thisaigal NewsYouTube

கெடா மந்திரி பெசார் சனூசியின் பகிரங்க மன்னிப்பை / ஏற்றுக்கொண்டார் சிலாங்கூர் சுல்தான் / ஆனால், வார்த்தைகளில் கவனம் தேவை என அறிவுறுத்தினார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கெடா மந்திரி பெசார் சனூசியின் பகிரங்க மன்னிப்பை / ஏற்றுக்கொண்டார் சிலாங்கூர் சுல்தான் / ஆனால், வார்த்தைகளில் கவனம் தேவை என அறிவுறுத்தினார்

பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 26-

சிலாங்கூர் மாநில அரச பரிபாலனத்தை அவமதிக்கும் நோக்கத்தைக் கொண்டது என கருதப்படும்
அறிக்கையை வெளியிட்டதற்காக கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹம்மது சானுசி முஹமட் நோர் -, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, கேட்டுக்கொண்ட பகிரங்க மன்னிப்பை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா, பெருமனதுடன் இன்று ஏற்றுக்கொண்டுள்ளார்.

அதேவேளையில் இனி வார்த்தைகளை உதிர்க்கும் போது மிகுந்த கவனம் தேவை என்று சனூசிக்கு அறிவுறுத்தினார்..

முஸ்லீம்கள் மற்றும் மலாய்க்காரர்கள் தங்களுக்கு இடையில் பேணி வருகின்ற UKHUWAH எனப்படும் சகோதரத்துவம் அடிப்படையில், சனூசியின் இந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்வதாக மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் அறிவித்துள்ளார்.

முஸ்லீம்கள் தங்களுக்கு இடையில் விரோத மனப்பான்மையை விதைக்கக்கூடாது. ஒருவர் தனது செயலுக்காக கேட்கப்படும் மன்னிப்பு, தூய உள்ளத்துடன் இருக்கும் பட்சத்தில் அதனை ஏற்று, மன்னித்து அருளும் மாண்பு, முஸ்லீம்களிடம் மலர வேண்டும் என்று சுல்தான் வலியுறுத்தினார்.

சிலாங்கூர் சுல்தானை அவமதிக்கும் வகையில் கோம்பாக், தாமன் செளயாங் முதியர -வில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜுலை 11 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தின் போது தாம் ஆற்றிய, நிந்தனை தன்மையான உரைக்காக சிலாங்கூர் சுல்தானிடமும், சிலாங்கூர் மந்திரி பெசாரிடமும், சிலாங்கூர் மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கெடா மந்திரி பெசார் சனூசி நேற்று அலோர் ஸ்டார் விஸ்மா டாருள் அமானில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் தாம் வெளியிடக்கூடிய அறிக்கைகளில் தாம் மிகுந்த
கவனத்துடன் இருப்பதாகவும், அந்த அறிக்கைகள் கண்ணியமானதாகவும், மலாய் கலாசார பாரம்பரியத்தை காக்கும்
வகையிலும், மலாய் ஆட்சியாளர்கள் மற்றும் அரச அமைப்பின்
கௌரவத்தை காக்கும் வகையிலும், இருக்கும் என்று சனூசி உறுதி கூறினார்..

சிலாங்கூர் அரச பரிபாலனத்திற்கு எதிராக சனூசியின் நிந்தனைக்குரிய கருத்துக்களால் அவருக்கு
எதிராக கடந்த ஜூலை 18 ஆம் தேதி 3R சட்டத்தின் கீழ் ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
நவம்பர் 1 முதல் கியூஆர் பணப் பரிவர்த்தனைகளுக்கு சேவைக் கட்டணமா? - நிதி அமைச்சு மறுப்பு

நவம்பர் 1 முதல் கியூஆர் பணப் பரிவர்த்தனைகளுக்கு சேவைக் கட்டணமா? - நிதி அமைச்சு மறுப்பு

மழையையும் பொருட்படுத்தாமல் 63,000 ரசிகர்களை ஈர்த்த சித்தி நூர்ஹாலிஸா இசை நிகழ்ச்சி: அன்வார் பாராட்டு

மழையையும் பொருட்படுத்தாமல் 63,000 ரசிகர்களை ஈர்த்த சித்தி நூர்ஹாலிஸா இசை நிகழ்ச்சி: அன்வார் பாராட்டு

போராட்ட சூழல்: பிரான்ஸ் பயணத்தை ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்தல்

போராட்ட சூழல்: பிரான்ஸ் பயணத்தை ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்தல்

கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு  1,000 ரிங்கிட் நிதி  உதவி! எஞ்சியவர்களுக்கான  தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு 1,000 ரிங்கிட் நிதி உதவி! எஞ்சியவர்களுக்கான தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்