ஜி.பி.எஸ். எனப்படும் காபோங்காங் பார்த்தி சரவாக் கட்சியின் ஆதரவு ஒற்றுமை அரசாங்க கூட்டணிக்கு வலுவான ஆதரவு அளித்து வருவதாகவும் தங்களின் ஆதரவு என்றும் அவர்களுக்கு உண்டு என அக்கட்சியைச் சார்ந்த நாட்டின் இரண்டாவது துணை பிரதமரான ஃபடில்லாஹ் யூசோஃப் தெரிவித்தார்.
ஒற்றுமை அரசாங்க கூட்டணியைக் கவிழ்ப்பதற்கான திட்டங்கள் எதிர்கட்சியினாரல் தீட்டப்பட்டு வருவதாக அன்வார் வெளியிட்டிருந்த கருத்தை ஒட்டி ஜி.பி.எஸ். கட்சி தங்களின் வலுவான அதரவை மலேசிய பிரதமருக்குத் தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.








