Nov 16, 2026
Thisaigal NewsYouTube

சிலாங்கூர் ராஜா மூடாவின் உதவியாளர் எனப் போலியாக நடித்து மோசடி – ஆடவருக்கு ஓராண்டு சிறை, இரண்டு பிரம்படிகள்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சிலாங்கூர் ராஜா மூடாவின் உதவியாளர் எனப் போலியாக நடித்து மோசடி – ஆடவருக்கு ஓராண்டு சிறை, இரண்டு பிரம்படிகள்

சிலாங்கூர் ராஜா மூடாவின் உதவியாளர் எனப் போலியாக நடித்து, சொத்து விற்பனை தொடர்பான மோசடியில் ஈடுபட்ட 40 வயது ஆடவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும், இரண்டு பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.

அல் ஸுல்ஃபாட்லி அலியாஸ் எனும் அந்த ஆடவர், மோசடி தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து, கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி அமிருல் அஷ்ராஃப் அப்துல் ரசிட் இந்தத் தண்டனையை விதித்தார்.

கடந்த அக்டோபர் 27ஆம் தேதி கைது செய்யப்பட்ட நாளிலிருந்து தண்டனையை அனுபவிக்கவும் உத்தரவிடப்பட்டது.

இந்த மோசடி தொடர்பாக அவருடன் குற்றஞ்சாட்டப்பட்ட அவரது வருங்கால மனைவி நுருல் நூர் ஷாஹிரா கமாருடின், குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளார். அவருக்கு 3 ஆயிரம் ரிங்கிட் பிணை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, எகோ அர்டென்ஸ் பகுதியில் சொத்து மற்றும் சொகுசு வாகனம் விற்பனை செய்வதாகக் கூறி மருத்துவர் ஒருவரிடம் 155 ஆயிரம் ரிங்கிட் மோசடி செய்ததாக இருவரும் மற்றொரு வழக்கிலும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
செயற்கை நுண்ணறிவு நிர்வாகத்தில் ஆசியான்–சீனா ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் – அன்வார்

செயற்கை நுண்ணறிவு நிர்வாகத்தில் ஆசியான்–சீனா ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் – அன்வார்

கோலாலம்பூர் சீன அசெம்பிலி மண்டபத்தின் நிலப் பிரீமியம் 4.67 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 1,000 ரிங்கிட்டாகக் குறைப்பு

கோலாலம்பூர் சீன அசெம்பிலி மண்டபத்தின் நிலப் பிரீமியம் 4.67 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 1,000 ரிங்கிட்டாகக் குறைப்பு

லுமுட்டில் கரையை மோதிய பிரமாண்ட கப்பல் – கரையோரத் தடுப்புச் சுவர் சேதம்

லுமுட்டில் கரையை மோதிய பிரமாண்ட கப்பல் – கரையோரத் தடுப்புச் சுவர் சேதம்

ஆசிரியர் மீது கோடரியால் தாக்குதல் – 16 வயது மாணவர் மீது மூன்று குற்றச்சாட்டுகள்

ஆசிரியர் மீது கோடரியால் தாக்குதல் – 16 வயது மாணவர் மீது மூன்று குற்றச்சாட்டுகள்

ஒரே குலுக்கலில் கோடீஸ்வரர்களான இருவர் – 38 மில்லியன் ரிங்கிட் அதிர்ஷ்டம்

ஒரே குலுக்கலில் கோடீஸ்வரர்களான இருவர் – 38 மில்லியன் ரிங்கிட் அதிர்ஷ்டம்

ஆரோக்கியமற்ற உணவு சந்தைப்படுத்தலுக்கு கட்டுப்பாடு: 2027-ல் புதிய ஊட்டச்சத்து சட்டம் கொண்டுவர மலேசியா திட்டம்

ஆரோக்கியமற்ற உணவு சந்தைப்படுத்தலுக்கு கட்டுப்பாடு: 2027-ல் புதிய ஊட்டச்சத்து சட்டம் கொண்டுவர மலேசியா திட்டம்