Jul 6, 2026
Thisaigal NewsYouTube
எஸ்எஸ்டி வரி விதிப்பில் அரிசி, சீனி, கோதுமை குறிப்பிட்ட பொருட்களுக்கு விலக்களிப்பு
தற்போதைய செய்திகள்

எஸ்எஸ்டி வரி விதிப்பில் அரிசி, சீனி, கோதுமை குறிப்பிட்ட பொருட்களுக்கு விலக்களிப்பு

Share:

கோலாலம்பூர், ஜூன்.11-

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டதன்படி, எஸ்எஸ்டி எனப்படும் விற்பனை மற்றும் சேவை வரி, வரும் ஜுலை முதலாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதில் அரிசி, சீனி, கோதுமை மற்றும் இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட உணவுப் பொருட்களுக்கு விலக்களிப்பு வழங்கப்படுவதாக நிதி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

விரிவுப்படுத்துப்பட்டுள்ள எஸ்எஸ்டி தொடர்பான விவரங்கள் குறித்து நிதி அமைச்சு விளக்கம் அளித்துள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கும், இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் 5 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று அது குறிப்பிட்டுள்ளது.

பழங்கள் இறக்குமதி செய்யப்பட்டால் அவை 5 விழுக்காடு விற்பனை வரிக்கு உட்பட்டவையாகும். எனினும் உள்ளூரில் விளையும் பழங்களுக்கு விற்பனை வரியிலிருந்து விலக்களிக்கப்படுகின்றன.

தவிர அரிசி, கோதுமை, சீனி, உப்பு மற்றும் இறைச்சி போன்ற இறக்குமதி செய்யப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட உணவுகள் மற்றும் அத்தியாவசியமானவை என்று கருதப்படும் பொருட்களுக்கு விற்பனை வரியிலிருந்து விலக்களிக்கப்படுகின்றன.

இதே போன்று உள்ளூரில் தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய்க்கு வரியிலிருந்து விலக்களிக்கப்படுவதாக நிதி அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

Related News

மாச்சாப் சட்டமன்றத் தொகுதி:டத்தோ ஆன் ஹாஃபிஸ் காசி-ஐ எதிர்த்து நூர் ஹாஃபிஸ் ரோஸ்லான் நேரடிப் போட்டி – வாக்காளர்கள் திரளாக வந்து வாக்களிக்க அழைப்பு!

மாச்சாப் சட்டமன்றத் தொகுதி:டத்தோ ஆன் ஹாஃபிஸ் காசி-ஐ எதிர்த்து நூர் ஹாஃபிஸ் ரோஸ்லான் நேரடிப் போட்டி – வாக்காளர்கள் திரளாக வந்து வாக்களிக்க அழைப்பு!

அன்வார் எச்சரிக்கைக்குப் பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் அகமட் ஃபத்லி கேள்வி

அன்வார் எச்சரிக்கைக்குப் பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் அகமட் ஃபத்லி கேள்வி

புத்திரி வங்சா தொகுதியில் மஸ்லீ மாலிக்கிற்கு இந்தியர்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவு அமோகம்

புத்திரி வங்சா தொகுதியில் மஸ்லீ மாலிக்கிற்கு இந்தியர்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவு அமோகம்

மக்காவ் அனைத்துலக விமான நிலையத்தில் 3 கிலோ ஹெராயின் கடத்திய மலேசிய இளைஞர் கைது

மக்காவ் அனைத்துலக விமான நிலையத்தில் 3 கிலோ ஹெராயின் கடத்திய மலேசிய இளைஞர் கைது

இடைநிலைப்பள்ளியில் கத்திக்குத்து: அதிர்ச்சியில் உள்ள மாணவர்களுக்கு ஆறுதல் கூற ஆலோசகர்கள் குழு வருகை

இடைநிலைப்பள்ளியில் கத்திக்குத்து: அதிர்ச்சியில் உள்ள மாணவர்களுக்கு ஆறுதல் கூற ஆலோசகர்கள் குழு வருகை

சட்டமன்றத் தேர்தல்: ஜசெக சார்பில் 8 ஆற்றல் வாய்ந்த பெண் வேட்பாளர்கள் களம் – தியோ நி சிங் கூறுகிறார்

சட்டமன்றத் தேர்தல்: ஜசெக சார்பில் 8 ஆற்றல் வாய்ந்த பெண் வேட்பாளர்கள் களம் – தியோ நி சிங் கூறுகிறார்