கோலாலம்பூர், நவம்பர்.19-
கோலாலம்பூர், ஜாலான் ஈப்போவில் பிபிஆர் அடுக்குமாடி குடியிருப்பை நோக்கிச் செல்லும் சாலையில் லோரி மோதித் தள்ளியதில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் இன்று காலை 11 மணியளவில் நிகழ்ந்தது என்று கோலாலம்பூர் போக்குவரத்துப் போலீஸ் பிரிவின் உதவி ஆணையர் முகமட் ஸம்ஸுரி முகமட் இசா தெரிவித்தார்.
ஜாலான் ஈப்போவிலிருந்து வந்து கொண்டிருந்த லோரி ஒன்று ஜாலான் பிபிஆர் கம்போங் பத்துவில் இடதுபுறம் திரும்பிய போது மோட்டார் சைக்கிளை மோதியதாகப் பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதில் 79 வயது முதியவர், லோரியின் பின்சக்கரத்தில் சிக்கி பலத்த காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டார் என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் முகமட் ஸம்ஸுரி முகமட் இசா குறிப்பிட்டுள்ளார்.








