வீடு ஒன்று தீப்பிடித்துக்கொண்டதில் முதியவர் ஒருவர் கருகி மாணடார். இதர நால்வர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். இச்சம்பவம் சிபுவிலிருந்து 115 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கம்போங் ஹலூட், மத்து என்ற இடத்தில் நிகழ்ந்தது. 68 வயதான மெராயிஸ் அரிஸ் என்பவரே இச்சம்பவத்தில் மாண்டதாக போலீசார் அடையாளம் கூறினர்.
இன்று அதிகாலை 5 மணியளவில் நிகழ்ந்த இந்த தீ விபத்தில் அந்த முதியவரின் மகன் மற்றும் பேரப்பிள்ளைகள் உயிர்தப்பியதாக போலீசார் தெரிவித்தனர். தீ ஏற்பட்டதற்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது.








