பங்சார், செப்டம்பர்.21-
சமூக வலைத்தளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் வகையில், சுங்கை பாரு கிராம மேம்பாட்டுத் திட்டம், சிங்கப்பூர் நிறுவனத்திற்குச் சொந்தமானது என்ற தகவல் முற்றிலும் தவறானது என்று சுங்கை பாரு கிராம மக்களின் சங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மேம்பாட்டாளர், கிள்ளான் பகுதியைச் சேர்ந்த ஒரு மலேசியர் என்றும், சட்டத்திற்கு உட்பட்டே அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு வருவதாகவும் சங்கத்தின் தலைவர் சனிதா யூனோஸ் கூறியுள்ளார்.
இந்தப் பொய்யான தகவலால், இந்தத் திட்டத்தை முன்னெடுத்து வரும் நிறுவனம் பெரும் சிரமத்தை சந்திப்பதாகவும் சனிதா தெரிவித்தார்.








