கோலாலம்பூர், ஜூலை.22-
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும் வேளையில் எம்.பி.க்களின் மன அழுத்தத்தைக் குறைக்கக்கூடிய சாதனங்களை விநியோகிக்கும்படி சுகாதார அமைச்சுக்கு நாடாளுமன்ற சபாநாயகர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் பரிந்துரை செய்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஆஜராகக்கூடிய உறுப்பினர்கள், அவையில் நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் நிலை உள்ளது. இதனால் அவர்களின் உடல் நலம் பாதிக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாக டான் ஶ்ரீ ஜொஹாரி குறிப்பிட்டார். இந்நிலையில் அவர்களுக்கு ஏற்படக்கூடிய மன அழுத்தத்தைச் சிறப்பு உபகரணங்கள் மூலம் குறைக்க முடியும் என்று அவர் ஆலோசனைக் கூறினார்.








