Dec 2, 2025
Thisaigal NewsYouTube
முன்னாள் டிபிகேஎல் நிர்வாக இயக்குநர் மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு!
தற்போதைய செய்திகள்

முன்னாள் டிபிகேஎல் நிர்வாக இயக்குநர் மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு!

Share:

கோலாலம்பூர், நவம்பர்.07-

தனிநபர் ஒருவரிமிருந்து 50,000 ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக, கோலாலம்பூர் மாநகர மன்றமான டிபிகேஎல்லின், முன்னாள் நிர்வாக இயக்குநர் மீது, செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.

முகமட் ஹாமிம் என்ற முகமட் கமாருடின், மாநகர மன்றத்தில் சில வேலைகளைச் சுமூகமாக முடித்துக் கொடுப்பதற்காக, அந்நபரிடமிருந்து லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 10-ஆம் தேதி, ஜாலான் சங்காட் துங்கு என்ற இடத்தில் அவர் இக்குற்றத்தைப் புரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டம், பிரிவு 165 இன் கீழ் சுமத்தப்பட்டுள்ள இக்குற்றச்சாட்டில், குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அபராதமும் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

Related News