பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரில் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு உதவும் வகையில் மலேசியா பத்து லட்சம் வெள்ளியை நிவாரண நிதியாக வழங்குகிறது. பாலஸ்தீன மக்கள் மனிதாபிமான உதவித்திட்டத்தின் வங்கி கணக்கில் மலேசியாவின் பத்து லட்சம் வெள்ளி நிவாரண நிதி சேர்க்கப்படவிருப்பதாக துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன மக்களின் துயர் துடைப்பு நிதிக்கு மக்களவை சபா நாயகரின் அனுமதியுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கலாம் என்று அம்னோ தலைவருமான அகமட் ஜாஹிட் கேட்டுக்கொண்டார்.








