Jul 30, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மாதம் தோறும் லஞ்சம் பெற்றனர், எட்டு அமலாக்க அதிகாரிகள் கைது

Share:

கோலாலம்பூர், ஜூலை 23-

கோலாலம்பூர் மாநகரில் அந்நிய நாட்டு வியாபாரிகளுக்கு இடையூறு விளைவிக்காமல், அவர்களின் வியாபாரத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு மாதம் தோறும் லஞ்சம் பெற்று வந்ததாக நம்பப்படும் ஊராட்சி மன்றத்தைச் சேர்ந்த எட்டு அமலாக்க அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்துள்ளது.

இவர்கள் அனைவரும் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, விசாரணைக்கு ஏதுவாக தடுப்புக்காவல் அனுமதியை SPRM பெற்றுள்ளது.

கோலாலம்பூர் மாநகரின் மையப்பகுதியில் AliBaba வர்த்தக உரிமத்தைப் பயன்படுத்தி அந்நிய நாட்டவர்கள் வியாபாரம் செய்வதற்கு மாதம் தோறும் சராசரி 12 ஆயிரம் வெள்ளி வரையில் இவர்கள் லஞ்சம் பெற்று வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த அமலாக்க அதிகாரிகளின் நடவடிக்கைகளை கடந்த ஆறு மாத காலமாக அணுக்கமாக கண்காணித்து, உளவுத்தகவலை சேரித்து வந்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM , இந்த எட்டுப்பேரையும் வளைத்துப்பிடித்துள்ளது.

கோலாலம்பூர் மாநகரில் ஒரு வர்த்தகப்பகுதியில் லஞ்சம் கேட்கும் வழக்கமான நடவடிக்கையின் போது இவர்கள் கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர். SPRM மேற்கொண்ட Op Orange என்ற நடவடிக்கையின் போது 30 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு எதிரான கைது வேட்டை காலை 8.30 மணி முதல் 11 மணி வரை நடைபெற்றதாக தெரிகிறது. மாநகரில் விபாபாரம் செய்யும் அந்நிய வியாபாரிகளிடம் மாதம் தோறும் 200 வெள்ளி முதல் ஆயிரம் வெள்ளி வரையில் லஞ்சமாக பெற்று வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related News

நான் தான் சிவாஜி தி பாஸ்!": சிறைவாசம், சித்திரவதைகளைக் கடந்து ஜெயித்த கதையைக் கூறி உருகிய பிரதமர் அன்வார்

நான் தான் சிவாஜி தி பாஸ்!": சிறைவாசம், சித்திரவதைகளைக் கடந்து ஜெயித்த கதையைக் கூறி உருகிய பிரதமர் அன்வார்

போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கார் ஓட்டி இரு பெண்கள் கொலை:  ஆடவர் மீது குற்றச்சாட்டு

போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கார் ஓட்டி இரு பெண்கள் கொலை: ஆடவர் மீது குற்றச்சாட்டு

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு