கோலாலம்பூர், செப்டம்பர்.10-
குற்றவியல் நம்பிக்கை மீறல் குற்றச்சாட்டின் அடிப்படையில் தேடப்பட்டு வரும், முன்னாள் பிரதமர் டான் ஶ்ரீ மொகிதின் யாசினின் மருமகன் டத்தோ ஶ்ரீ முகமட் அட்லான் பெர்ஹான்,மத்தியக் கிழக்கு நாடு ஒன்றில் வசிப்பதாக நம்பப்படுகின்றது.
மலேசியாவுடன் அந்நாடு கடத்தல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்பதால், அதன் பெயரைத் தற்போது வெளியிட முடியாது என எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
என்றாலும், முகமட் அட்லானின் கடப்பிதழை முடக்க உள்துறை அமைச்சகத்துடன் தாங்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் அவரை மலேசியாவிற்குக் கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அஸாம் பாக்கி குறிப்பிட்டுள்ளார்.








