ஜோகூர் பாரு, ஆகஸ்ட்.29-
உள்ளூரைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் ஓர் ஆண் கைது செய்யப்பட்டது மூலம் அவர்கள் பயன்படுத்திய மாஸ்டா 5 ரகக் காரிலிருந்து போதைப்பொருள், ஒரு கைத்துப்பாக்கியைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி ஜோகூர், கூலாய், ஜாலான் அலோர் புக்கிட்டில் 18க்கும் 42 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டதாக அரச மலேசிய போலீஸ் படையின் சிஐடி இயக்குனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.
காரின் போனட்டில் 9mm ரக துப்பாக்கியும் 175 தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக இன்று ஜோகூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ குமார் இதனைத் தெரிவித்தார்.








