காஜாங், ஆகஸ்ட்.27-
காஜாங்கில் ஒரு காதல் ஜோடி உட்பட மூன்று நபர்களைப் போலீசார் கைது செய்தது மூலம் 7 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி மேற்கெள்ளப்பட்ட வெவ்வேறு சோதனை நடவடிக்கையில் 34 வயது பெண்ணையும், அவரின் 32 வயது காதலனையும், அவர்களுடன் இருந்த 32 வயது நபரையும் போலீசார் கைது செய்ததாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யுசோஃப் தெரிவித்தார்.
அந்த மூவர் தங்கியிருந்த வீட்டில் சோதனையிட்டதில் மொத்தம் 7 லட்சத்து 57 ஆயிரத்து 760 ரிங்கிட் பெறுமானமுள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ஏசிபி நாஸ்ரோன் விளக்கினார்.








