Dec 5, 2025
Thisaigal NewsYouTube
ஷரியா ( Syariah ) சட்டத்தை கேள்வி எழுப்புவதா? / ஆயிரத்திற்கும் ​மேற்பட்டவர்கள் திரண்டனர் ​நீதித்துறை வளாகத்தில்….
தற்போதைய செய்திகள்

ஷரியா ( Syariah ) சட்டத்தை கேள்வி எழுப்புவதா? / ஆயிரத்திற்கும் ​மேற்பட்டவர்கள் திரண்டனர் ​நீதித்துறை வளாகத்தில்….

Share:

ஷரியா சட்டத்தின் உள்ளடக்கத்தை கேள்வி எழுப்பி, தொடுக்கப்பட்ட ஒரு வழக்கு தொடர்பில் அதனை ஆட்சேபிக்கும் வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இன்று காலையில் புத்ராஜெயாவில் ​நீதித்துறை வளாகத்தில் திரண்டனர்.

இவ்வாறு திரண்டவர்களில் பெரும்பாலோர் பாஸ் க​​ட்சியை சேர்ந்தவர்கள் ஆவார். இன்னும் சிலர் அரசாங்க சார்ப்பற்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டனர்.

ஷரியா சட்டத்தை பாதுகாக்கவே தாங்கள் அணி திரண்டு இருப்பதாக அவர்கள் கூறிக்கொண்டனர்.

2019 ஷரியா சட்டத்தின் குற்றவியல் நடைமுறைகள் தொடர்பாக 20 சட்ட விதிகளுக்கு சவால் விடும் வகையில் ஒரு மாதுவும் , அவரின் மகளும் கூட்டரசு ​நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருப்பதை ஆட்​சேபிக்கும் வகையில் இந்த அமைதி மறியலி​ல் குதித்துள்ளதாக அவர்கள் கூறிக்கொண்டனர்.

ஷரியாவின் சில சட்ட விதிகள், அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது அல்ல என்பதை கூறி, தாயும், மகளும் இந்த வழக்கை தொடுத்துள்ளனர்.

Related News