Oct 16, 2026
Thisaigal NewsYouTube

அடிதடியில் இறங்கிய முதியவருக்கு 1,500 ரிங்கிட் அபராதம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அடிதடியில் இறங்கிய முதியவருக்கு 1,500 ரிங்கிட் அபராதம்

கோலாலம்பூர், டிச.9-


இரண்டு மாதங்களுக்கு முன்பு, கார் நிறுத்தும் இடத்தை கைப்பற்றுவதில் ஏற்பட்ட தகராற்றில் ஆடவரை தாக்கிய குற்றத்திற்காக முதியவர் ஒருவருக்கு கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 1,500 வெள்ளி அபராதம் விதித்தது.

அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் ஒரு மாத சிறைத்தண்டனையை விதிப்பதாக மாஜிஸ்திரேட் மரிஸ்கா கலிஸான் தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி காலை 7.30 மணியளவில் பிரிக்பீல்ட்ஸ், ஜாலான் பெரிசாவில் சாலையோரத்தில் 42 வயது நபரை தாக்கியதாக 68 வயது எங் ஹொங் சாய் என்பவர் குற்றஞ்சாட்டப்பட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →