பகாங்,ஜூலை 27-
முன்னாள் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சரும், முன்னாள் அம்னோ தலைவியுமான மூத்த அரசியல்வாதி Tan Sri Dr Siti Zahara Sulaiman காலமானார். அவருக்கு வயது 75.
பகாங், Paya Besar முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான Siti Zahara, நேற்றிரவு 11.23 மணியளவில் Serdang மருத்துவமனையில் தனது இறுதி மூச்சை விட்டதாக அவரின் மூத்த புதல்வி Timoer Dzakry Samaridin தெரிவித்தார்.
அம்னோ முன்னாள் உச்சமன்ற உறுப்பினரான Siti Zahara, 1886 ஆம் ஆண்டு பிரதமர் துறை துணை அமைச்சர், 1995 ஆம் ஆண்டு சுகாதாரத்துறை துணை அமைச்சர் மற்றும் 1999 ஆம் ஆண்டிலிருந்து 2004 ஆம் ஆண்டு வரை தேசிய ஒற்றுமை, சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் என்ற அளவில் அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பு வகித்தவர் ஆவார்.
அம்னோவின் பலம் பொருந்திய மகளிர் பிரிவு தலைவியாக விளங்கிய இரும்புப்பெண்மணி Tan Sri Rafidah Aziz- ஸை 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற அம்னோ மகளிர் தேர்தலில் தோற்கடித்தது மூலம் Siti Zahara, பலரின் கவன ஈர்ப்புக்குரிய நபராக மாறினார்.
1998 ஆம் ஆண்டு சுகாதாரத்துறை துணை அமைச்சராக இருந்த போது மக்கள் புகைப்பிடிப்பதை கட்டுப்படுத்த ஒவ்வொரு ஆண்டும் புகையிலை இல்லா மாதத்தை அறிமுகப்படுத்திய பெருமை Siti Zahara – வையே சேரும்.
இதற்கு மேலாக கிள்ளான் பள்ளத்தாக்கில் பெட்டாலிங் ஜெயா, Taman Medan- னில் 2001 ஆம் ஆண்டு இன விவகாரம் வெடித்த போது, நிலைமைய கட்டுப்படுத்த, சபா, சரவாவிலிருந்து போலீஸ் படை குவிக்கப்பட்ட நிலையில் மூன்று வாரம் நீடித்த இன பதற்ற நிலையை தணிக்க தேசிய ஒற்றுமை மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் என்ற முறையில் Taman Medan-னில் ஓரிட மக்களிடையே ஒற்றுமையை விதைப்பதில் Siti Zahara மிகப்பெரிய பங்களிப்பை வழங்கினார் என்பது வரலாறாகும்.








