Oct 17, 2026
Thisaigal NewsYouTube

வரம்புமீற வேண்டாம் : ஐஜிபி எச்சரிக்சை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வரம்புமீற வேண்டாம் : ஐஜிபி எச்சரிக்சை

கோலாலம்பூர், நவ.8-


விவிஐபி எனப்படும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர் என்று கருதப்படக்கூடிய பிரமுகர்களுக்கு அரச மலேசிய போலீஸ் படை சார்பில் மெய்க்காவலர் சேவையில் ஈடுபடுகின்ற போலீஸ்கார்கள் சட்டத்திற்கு புறம்பா, வரம்புமீறி செயல்பட வேண்டாம் என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடீன் ஹுசேன் நினைவுறுத்தினார்.

சட்டத்தை மீறி செயல்படுவததற்கு போலீஸ் படையைச் சேர்ந்த எந்தவொரு உறுப்பினருக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை என்பதையும் ஐஜிபி நினைவுறுத்தினார். பிரமுகர்களுக்கு உடன் செல்லும் மெய்க்காவலர்களாக செயல்பட்ட போலீஸ் படையைச் சேர்ந்த இருவர் சில தினங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு இருப்பதையும் டான்ஸ்ரீ ரஸாருடீன் சுட்டிக்காட்டினார்.

எந்தவொரு போலீஸ்காரருக்கும் சட்டத்தை மீறிய நிலையில் சிறப்பு சலுகை எதுவும் வழங்கப்படவில்லை என்பதையும் பொது மக்களுக்கு ஐஜிபி தெளிவுப்படுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →