குவாந்தான், ஆகஸ்ட்.02-
பகாங் மாநிலத்தில் அரசு நிலங்களில் நிகழும் அத்துமீறல் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படும் வரையில் தொடர்ந்து குரல் கொடுத்து வரப் போவதாக மேன்மை தங்கிய பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா சூளுரைத்துள்ளார்.
எனினும் அத்துமீறல் நடவடிக்கைகளை ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும் என்று சுல்தான் வலியுறுத்தினார்.
குறிப்பாக, பொதுமக்கள் தகவல் அளித்து உதவுவது, மாவட்ட, நில அலுவலகங்கள் மற்றும் வன இலாகாவின் தீவிர நடவடிக்கை முதலியவற்றினால் இது சாத்தியமாகலாம் என்று சுல்தான் குறிப்பிட்டார்.
பகாங் சுல்தானின் 66 ஆவது பிறந்த தினத்தையெட்டி அண்மையில் குவாந்தான், அப்துலாஸிஸ் அரண்மனையில் பெர்னாமாவிற்கு அளித்த சிறப்பு நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.








