கோலாலம்பூர், ஜூலை 05-
ஸ்.பி.ம் தேர்வில் 10 ஏ பெற்றும்,மெட்ரிகுலேஷன் கல்வித் திட்டத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள 69 பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கும், பல்கலைக்கழகத்திற்கான முந்திய படிப்பான மெட்ரிகுலேஷன் திட்டத்தில் இடம் கிடைப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஸ்.பி.ம் தேர்வில் 10 ஏ பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் இனம் மற்றும் அவர்களின் பின்னணிப் பாராமல் மெட்ரிகுலேஷன் கல்வித் திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் உறுதி அளித்துள்ளார். .
ஏற்கனவே மெட்ரிகுலேஷன் கல்வித் திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ள அந்த 69 பூமிபுத்ரா அல்லாத மாணவர்களும், பிரதமரின் அறிவிப்புக்கு பிறகும், அந்த கல்வித் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளபட வேண்டும் என்று மசீச. இளைஞர் பிரிவுத் தலைவர் லிங்க் தியான் சூன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மெட்ரிகுலேஷன் கல்வித் திட்டத்தில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, மேல்முறையீடு செய்து கொண்ட மாணவர்களின் நிலை குறித்து கல்வி அமைச்சு நாளை வியாழக்கிழமை தனது முடிவுகளை அறிவிக்கவிருக்கிறது. .
இந்நிலையில் 10 ஏ பெற்ற பூமிபுத்ரா அல்லாத 69 மாணவர்கள், மெட்ரிகுலேஷன் கல்வித் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்களா ? இல்லையா? என்பது குறித்து கல்வி அமைச்சு நாளை வெளியிடும் முடிவின் மூலம் தெளிவாக தெரிந்து விடும் என்று மசீச. இளைஞர் பிரிவு கூறுகிறது.
குறிப்பாக, பிரதமரின் அறிவிப்பு,/ஸ்.பி.ம் தேர்வில் சிறந்த அடைவு நிலையைப் பெற்ற பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுகளின் நிலை, எந்த அளவிற்கு கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது, அவர்களுக்கு விடியலை தந்துள்ளதா? என்பது தெரிந்து விடும் என்று மசீச. தெரிவித்துள்ளது.
மெட்ரிகுலேஷன் கல்வி திட்டமானது ஸ்.தி.பி.ம் கல்விக்கு மாற்றாக, அரசாங்கம் வழங்கும் பல்கலைக்கழகத்திற்கு முந்தையப் படிப்பாகும்.








