May 21, 2026
Thisaigal NewsYouTube
கெவின் மொராயிஸ் கொலை வழக்கில் மார்ச் 14 இல் தீர்ப்பு
தற்போதைய செய்திகள்

கெவின் மொராயிஸ் கொலை வழக்கில் மார்ச் 14 இல் தீர்ப்பு

Share:

முன்னாள் துணை பப்ளிக் பிராசிகியூட்டர் டத்தோ அந்தோனி கெவின் மொரைஸ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவ மருத்தவமனையின் முன்னாள் மருத்துவர் டாக்டர் ஆர். குணசேகரன் உட்பட ஆறு இந்திய நபர்கள் செய்து கொண்ட மேல்முறையீட்டு வழக்கில் வரும் மார்ச் 14 ஆம் தேதி புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவிருக்கிறது.

60 வயது டாக்டர் குணசேகரன், 52 வயது எஸ். ரவிச்சந்திரன், 31 வயது ஆர். டினிஷ்வரன், 30 வயது ஏ.கே தினெஷ் குமார், 33 வயது எம். விஷ்வனாத், 30 வயது எஸ்.நிமலன் ஆகியோரின் வாதங்களை செவிமடுத்தப் பின்னர் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி டத்தோ அஹ்மாட் சைடி இப்ராஹிம் தீர்ப்பின் தேதியை அறிவித்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி காலை 7 மணியளவில் அரசு தரப்பு வழக்கறிஞர் கெவின் மொரைஸ்– யை கடத்திச் சென்று, சுபாங், ஜாலான் உஎஸ்ஜெ 1/6D என்ற முகவரியில் உள்ள ஒரு பட்டறையில் கொலை செய்து சடலத்தை தோம்பு ஒன்றில் அடைத்து, சிமெண்ட் பூசி, புதரில் எறிந்த குற்றத்திற்காக அறுவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜுலை மாதம் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது.

Related News

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

மலேசியாவின் சிறந்த 'AI' வணிகப் பள்ளியாக UKKM-ஐ மாற்ற புதிய வேந்தர் ஸ்டீவன் சிம் திட்டம்!

மலேசியாவின் சிறந்த 'AI' வணிகப் பள்ளியாக UKKM-ஐ மாற்ற புதிய வேந்தர் ஸ்டீவன் சிம் திட்டம்!

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

கெவின் மொராயிஸ் கொலை வழக்கில் மார்ச் 14 இல் தீர்ப்பு | Thisaigal News