Sep 27, 2026
Thisaigal NewsYouTube
ஷா ஆலமில் நாய் குட்டியை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்த நபர் கைது
தற்போதைய செய்திகள்

ஷா ஆலமில் நாய் குட்டியை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்த நபர் கைது

Share:

ஷா ஆலாம் செக்‌ஷன் 32 பகுதியில் நாய் குட்டி ஒன்றை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொடுமைப்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர் நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இருபது வயதுடையதாக நம்பப்படும் அந்த சந்தேக நபர், நேற்று பிற்பகல் 3.40 மணியளவில் கட்டுமானத் தளம் ஒன்றில் கைது செய்யப்பட்டதாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ராம்சே எம்போல் தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் அதிகாலை 2.14 மணியளவில், சமூக ஊடகமான டிக்டாக்கில் சம்பவத்தின் வீடியோ பரவியதையடுத்து, பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ராம்சே குறிப்பிட்டுள்ளார்.

இவ்வழக்கானது, 2015-ஆம் ஆண்டின் விலங்கு நலச் சட்டம், பிரிவு 29 மற்றும் தண்டனைச் சட்டம் பிரிவு 428-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்