ஜார்ஜ்டவுன், ஜனவரி.07-
உலகெங்கிலும் உள்ள 20 பிரபல சுற்றுலாத் தளங்களுடன் சேர்த்து, பினாங்கு மாநிலத்தையும் சிறந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக சிஎன்என் டிராவல் அறிவித்துள்ளது.
பினாங்கு மாநிலத்தின் இச்சாதனையை அம்மாநில சுற்றுலாத்துறை தலைவர் வோங் ஹோன் வாய் பாராட்டியுள்ளார்.
அதே வேளையில், உலகின் சிறந்த 52 சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக பினாங்கு மாநிலத்தை நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனமும் அங்கீகரித்துள்ளது.
மலேசியாவிலுள்ள பல்வேறு சுற்றுலாத் தளங்களில் பினாங்கு மட்டுமே அப்பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக பினாங்கு உலகளாவிய சுற்றுலா மற்றும் மாநில சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது.








