கோலாலம்பூர், ஜனவரி.08-
நேற்று பிரான்ஸ் நாட்டின் Paris Charles de Gaulle விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் நோக்கிப் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH21, எஞ்சினில் ஏற்பட்ட அசாதாரண நிலை காரணமாக, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, மீண்டும் விமான நிலையத்திற்கே திரும்பியது.
இச்சம்பவத்தின் போது, அவ்விமானம், பாதுகாப்பாகத் திரும்புவதற்கு வசதியாக, அவசர transponder குறியீட்டைப் பயன்படுத்துவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விமானக் குழுவினர் முறையாகக் கையாண்டதாக மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், காலை 11.55 மணியளவில் கோலாலம்பூர் நோக்கிப் புறப்பட்ட அவ்விமானம், பிற்பகல் 3.35 மணியளவில் பாரீஸ் விமான நிலையத்திற்கே மீண்டும் திரும்பியதாகவும் மலேசிய ஏர்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, அவ்விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் தங்கும் விடுதிகளில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை 5 மணியளவில், MH21D என்ற மற்றொரு விமானத்தின் மூலம் கோலாலம்பூர் வந்தடையவுள்ளனர்.








