Oct 18, 2026
Thisaigal NewsYouTube

இராணுவ வீரர் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இராணுவ வீரர் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு

அம்பாங், ஆகஸ்ட் 29-

தனது 12 வயது வளர்ப்பு மகளை, கடந்த ஜூன் மாதத்திலிருந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கோபரல் அந்தஸ்திலான ஒரு இராணுவ வீரர், அம்பாங், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

29 வயதுடைய அந்த நபர், நீதிபதி நோர்ஷிலா கமருதீன் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட இராணுவ வீரர, கடந்த ஜுன் 8 ஆம் தேதியிலிருந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரையில் அம்பாங் , பெர்சியரான் பைதுரி சேரஸ்- ஸில் உள்ள ஒரு வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 30 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 10 பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த இராணுவ வீரர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →