ஜார்ஜ்டவுன், அக்டோபர்.04-
கார் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி, சாலையை விட்டு விலகி, தடம் புரண்டு தீப்பற்றிக் கொண்டதில் இரு ஆடவர்கள் கருகி மாண்டனர்.
இந்தச் சம்பவம், இன்று காலை 7 மணியளவில் பினாங்கு, சுங்கை டூவா, ஜாலான் சுங்கை பாரு, சுங்கை லோக்கான் என்ற இடத்தில் நிகழ்ந்தது.
ஒருவர் காருக்குள் கருகி மாண்ட நிலையில் மற்றொருவர் காருக்கு வெளியே உயிரிழந்து கிடந்ததாக பினாங்கு தீயணைப்பு, மீட்புப் படையின் இயக்குநர் முகமட் ஷோகி ஹம்ஸா தெரிவித்தார்.
உடல் ரீதியாக நடத்தப்பட்ட சோதனையில் அவர்கள் இருவரும் ஆண்கள் என்று உறுதிச் செய்யப்பட்டது. அவ்விருவரும் பயணித்த புரோட்டோன் பிஎல்எம் கார், 80 விழுக்காடு அழிந்தது. சவப் பரிசோதனைக்காக இருவரின் உடல்களும் கெப்பாளா பாத்தாஸ் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








