Oct 9, 2026
Thisaigal NewsYouTube

அரசுப் பணிகளுக்கான விண்ணப்பம் 1.3 மில்லியனை எட்டலாம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அரசுப் பணிகளுக்கான விண்ணப்பம் 1.3 மில்லியனை எட்டலாம்

பட்டர்வொர்த், ஜூன்.21-

இந்த ஆண்டு அரசுப் பணிகளுக்கான விண்ணப்பங்கள் 1.3 மில்லியன் வரை அதிகரிக்கும் என மலேசியப் பொதுச் சேவை ஆணையம் எதிர்பார்க்கிறது. ஓய்வூதியத் திட்டம் இல்லாவிட்டாலும், பொதுச் சேவைக்கான தேவை, இளைஞர்களிடையே இன்னும் அதிகமாக உள்ளது என அதன் தலைவர் டத்தோ டாக்டர் அஹ்மாட் ஜைலானி முகமட் யூனோஸ் தெரிவித்தார்.

அரசுத் துறையில் வேலை வாய்ப்புகள் குறித்த அண்மையத் தகவல்களை இளைஞர்களுக்கு வழங்குவதற்காக, ஆணையம் நாடு முழுவதும் ‘கெம்பாரா கெர்ஜாயா எஸ்பிஏ’ போன்ற பல திட்டங்களை ஏற்பாடு செய்து வருகிறது. இந்தத் திட்டங்கள் மூலம் நேரடியாகவும் இணையம் மூலமாகவும் மக்கள் ஆணைய ஊழியர்களுடன் கலந்துரையாடி தகவல்களைப் பெறலாம்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →